Wednesday, December 28, 2011

சந்த்ர சூரியர்

படம்: அம்பிகாபதி
பாடல்: பாபநாசம் சிவன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1937

சந்த்ர சூரியர் 
போங்கதி மாறினும் 
வீழினும் நமக்கென்ன?

இந்த இன்பமே 
சொந்தம தானால் 
வானுலகும் வேண்டாம்

காதல ரன்பைத் தடைசெய்ய உலகிலோர் 
கருவிக்கு வலிமை யுண்டோ?
சாதலே வரினும் அதிலும் இருவரும் 
பிரிந்திடா உண்மை கொண்டோம்

இந்த உலகிலென் 
உடல்பொருள் ஆவி 
நீயே எனதுயிரும்
என்னுடல் உமக்கே 
சொந்தமிவ் வடியாள் 
பேசவும் அறியேனே!

No comments:

Post a Comment